இந்திய வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் தங்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க தயார் என்று இங்கிலாந்து அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்னர்.
இதனால் விஜய் மல்லையா இந்தியாவுக்கு வந்து வழக்கை எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்தில் தங்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் (எம்இஏ) மூலம் நீதிமன்றம் பிறப்பித்த வேண்டுகோள் கடிதத்தை இங்கிலாந்து அதிகாரிகளுக்கு அனுப்பியது. இதற்கு நேற்று பதிலளித்துள்ள இங்கிலாந்து அதிகாரிகள் இந்தியாவிடம் விஜய் மல்லையாவை ஒப்படைக்க தயார் என தெரிவித்துள்ளனர்.