வணிகம்

இவரைத் தெரியுமா?- இந்து சேகர் ஜா

செய்திப்பிரிவு

அரசுத் துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தப் பொறுப்பில் இருக்கிறார்.

மின் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். இந்நிறுவனத் தில் 1991-ம் ஆண்டு பணி சேர்ந்து பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இதற்கு முன்பு இந்நிறுவனத்தின் கண்காணிப்புக் குழுவுக்கு வடகிழக்குப் பிராந்தியத்தின் செயல் இயக்குநராக இருந்தார்.

தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) நிறுவன பணியாளராகவும் இருந்துள்ளார்.

நாகப்பட்டினம் மதுகிரி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பகுதி நேர இயக்குநராகவும் இருந்துள்ளார்.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் இயக்குநர் குழுவின் முழு நேர இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

மின்துறை சார்ந்து பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை தாக்கல் செய்துள்ளார். சர்வதேச அரங்கில் தொழில்நுட்ப கட்டுரைகளையும் இவர் தாக்கல் செய்துள்ளார்.

ஜாம்ஷெட்பூர் என்ஐடி-யில் மின் பொறியியலில் பட்டம் பெற்றவர்.

SCROLL FOR NEXT