வணிகம்

பேடிஎம் பேமென்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அனுமதி

பிடிஐ

பேடிஎம் நிறுவனம் பேமென்ட் வங்கி தொடங்குவதற்கு முழுமையான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது என பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய்சேகர் சர்மா தன்னுடைய வலைபதிவில் கூறியிருக்கிறார். மேலும் இந்த வங்கியில் முழு நேரம் பணியாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித் திருக்கிறார்.

ஆனால் பேமெண்ட் வங்கி எப்போது செயல்பட தொடங்கும் என்பது குறித்து அவர் முறையாக அறிவிக்கவில்லை. அதிகபட்சம் 60 நாட்களுக்குள் செயல்படத் தொடங்கும் என தகவல்கள் தெரி விக்கின்றன. முதல் கட்டமாக உத் தரப்பிரதேசத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேடிஎம் பேமெண்ட் வங்கிக்காக ஆரம்ப கட்ட முதலீடாக ரூ.400 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிறுவனத்தில் 51 சதவீதம் விஜய் சேகர் சர்மா வசமும், 49 சதவீதம் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் வசமும் இருக்கும்.

SCROLL FOR NEXT