தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனமான ஸோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர். 2007-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2005-ம் ஆண்டு அக் டோபர் மாதத்திலிருந்து 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை எம்பார்கடேரோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
2000-ம் ஆண்டிலிருந்து 2005-ம் ஆண்டு வரை எம்பார்கடேரோ நிறுவனத்தில் கார்ப்பரேட் பிரிவின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பிரிவில் இளநிலை பட்டமும் டியூக் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
1998-ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பிஎம்சி சாப்ட்வேர் நிறுவனத்தில் தொழில் மேம்பாட்டுக்கு பிரிவுக்கு இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
1988-ம் ஆண்டிலிருந்து 1995-ம் ஆண்டுவரை சாண்டா குரூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் மேலாளராக இருந்தவர்.