வணிகம்

‘வங்கிகள் விதிக்கும் அபராத கட்டணம் நியாயமானதே’

செய்திப்பிரிவு

வங்கிக் கணக்குகளில் குறைந்த பட்ச கட்டணத்தை பராமரிக்க வில்லையெனில் அதற்காக வங்கிகள் பிடித்தம் செய்யும் தொகை நியாயமானதுதான் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறியுள்ளார். ஆனால் இந்த சேவைக்காக குறைந்தபட்ச சராசரி கட்டணத்துக்கான வரம்பை வங்கிகள் தாண்டவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலமான பதிலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் கள்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் குறைந்த பட்ச கட்டணத்தை பராமரிப்பது தொடர்பாகவும், அதற்கான கட்டண பிடித்தங்கள் விதிக் கப்படுவது குறித்த மாற்றங் கள் தொடர்பாகவும் வாடிக்கை யாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே வங்கிகள் தெரிவித்திருக்க வேண்டும்.

இந்த கட்டணப் பிடித்தங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த சேவைக்கான சராசரி கட்டண விகிதங்களைவிட வங்கிகள் தாண்டவில்லை என்று ரிசர்வ் வங்கியின் விதிகளைச் சுட்டிக்காட்டி அமைச்சர் குறிப் பிட்டார்.

-பிடிஐ

SCROLL FOR NEXT