சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி.
1985-ம் ஆண்டு பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி.
தகவல் தொழில்நுட்பம், பொது நிதி, தொழில்துறை மேம்பாடு ஆகிய துறைகளில் மிகுந்த அனுபவம் மிக்கவர்.
2013-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சிஸ்கோ நிறுவனத்தின் இண்டர்நெட் பிஸினஸ் சொல்யூசன்ஸ் பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
கான்பூரில் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இன்ஜினீயரிங் பட்டமும் ஜப்பானில் உள்ள தேசிய பொது கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் பொது நிதிப் பிரிவில் முதுநிலை பட்டமும் முடித்தவர்.