வணிகம்

ரூ.251க்கு ஸ்மார்ட்போன் அறிவித்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனர் மொகித் கைது

பிடிஐ

ரூ.251க்கு ஸ்மார்ட்போன் அளிப்ப தாக வாக்குறுதி அளித்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனரான மொகித் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார். நொய்டாவைச் சேர்ந்த தொழில் முனைவோரான இவர், ரூ.251 க்கு மலிவு விலையில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்வதாக கடந்த ஆண்டில் அறிவித்து பரப்பரப்பை ஏற்படுத்தினார்.

இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவானதையடுத்து நேற்று முன்தினம் காசியாபாத்தில் காவல்துறையினர் இவரைக் கைது செய்துள்ளனர். விநியோக உரிமை அளிப்பதாக பலரிடமிருந்து பணம் வசூலித்து ஏமாற்றியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ள னர்.

இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய காசியாபாத் காவல்துறை ஆணையர் தீபக் குமார், மொகித் கோயல் விநியோ கஸ்தர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப நடக்க வில்லை. பணம் அளித்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோயல் மற்றும் நான்கு பேர் மீது ஷிகானி கேட் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

கோயல் மற்றும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மீது பலரும் புகார் அளித்துள்ளனர் என்றும் காவல்துறையினர் கூறினர்.

கடந்த ஆண்டில், ரூ.251க்கு மிக குறைந்த விலை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ள தாகக் கூறி ஒரே நாளில் இந்தியா வையே இந்த நிறுவனம் திரும்பிப் பார்க்க வைத்தது. இதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவை யும் மேற்கொண்டது. வாடிக்கை யாளர்களின் வேகத்தால் முன்பதிவு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்க ளிலேயே இந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது. இந்த நிறுவனம் தயாரிப்பு வசதிகள் இல்லாமலேயே ஸ்மார்ட்போன் முன்பதிவை தொடங்குகிறது என அப்போதே சர்சைகள் எழுந்தன. அமலாக்கத்துறையும் இந்த விவ காரத்தில் தலையிட்டது.

செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தின.

இதனிடையில் வாடிக்கை யாளர்களின் முன் பணத்தை நிறுவனம் திருப்பி அளித் தது. ஆனால் விநியோக உரிமை வாங்க பலரும் முன் பணம் செலுத்தி வந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மொகித் கோயல் நிறுவனத்திலிருந்து வெளியேறு வதாக நிறுவனம் செய்தி வெளியிட் டிருந்தது. தற்போது நிறுவன இயக்குநர்களில் ஒருவரான அன்மோல் கோயல் தலைவராக உள்ளார். நிறுவனம் தற்போது வரை 70,000 போன்கள் விநியோகித் துள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

SCROLL FOR NEXT