வணிகம்

நிறுவனப் பங்கு மதிப்பை இரு மடங்கு உயர்த்திய போகிமான் கோ கேம் செயலி!

ஏபி

க்யோட்டோவைச் சார்ந்த நிறுவனம் வெளியிட்ட வீடியோ கேம் செயலிக்கு கிடைத்த வரவேற்பால், 'நின்டெண்டோ' நிறுவனத்தின் பங்குகள் மளமளவென உயர்ந்து, டோக்கியோ பங்குச் சந்தையின் நான்கில் ஒரு பங்கைப் பிடித்துள்ளன.

'நின்டெண்டோ' என்ற ஜப்பானிய நிறுவனத்தின் பங்குகள் விலை, அந்நிறுவனம் வெளியிட்ட ''போகிமான் கோ'' வீடியோ கேமால் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

நின்டெண்டோ நிறுவனப் பங்குகள் இன்று (செவ்வாய்) 14 சதவீதம் உயர்ந்து டோக்கியோ பங்குச் சந்தையில் 31,700 யென்களாக (300 டாலர்கள்) உயர்ந்து முடிந்தன. இதனால் பங்குகள் மளமளவென உயர்ந்து, டோக்கியோ பங்குச் சந்தையின் நான்கில் ஒரு பங்கைப் பிடித்துள்ளன.

இந்த திடீர் உயர்வால் நிறுவனத்தின் மூலதனம் 4.5 ட்ரில்லியன் யென்களாக (42.4 பில்லியன் டாலர்கள்) உயர்ந்துள்ளது.

பாக்கெட் மான்ஸ்டர்ஸின் (Pocket Monsters) சுருக்கமே போகிமான் - பாக்கெட்டில் அடங்கும் குட்டிச்சாத்தான்கள் தான் போகிமான். நின்டெண்டோ (Nintendo) என்ற ஜப்பானிய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வீடியோ கேம் இது.

போகிமான் உலகில், சுற்றி மறைந்திருக்கும் சின்னச் சின்ன போகிமான்களை தேடிக் கண்டுபிடித்து அதை நாம் வசப்படுத்த வேண்டும். வசப்படுத்தியதும் அதற்கு பயிற்சி தந்து அதன் சக்திகளை கூட்டி மற்ற போகிமான்களுடன் சண்டையிட்டு அதன் மூலம் இன்னும் சக்திவாய்ந்த போகிமான்களை பெற வேண்டும். இதுதான் போகிமான் விளையாட்டு. இதற்கு, உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT