வணிகம்

இந்தியா வளர்ச்சி அடைவதற்கு சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

பிடிஐ

இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேவையில்லாத நடைமுறைகளை அகற்றிவிட்டு செயல்முறைகளை எளிதாகவும் வேகமாகவும் செயல்படுத்தும்படியான சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் அமைப்பின் முதலாம் ஆண்டு கூட்டத்தில் `மாறிவரும் இந்தியா’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியா மாற்றத்திற்கான சவால்களை சந்திக்க விரும்பினால் வெறும் கூடுதல் நடைமுறைகள் மட்டும் போதாது. முழுமையான மாற்றம் தேவைப்படுகிறது. இந்தியா விரைவாக மாற்றம் அடைய வேண்டும் என்பதே எனது தொலைநோக்காக உள்ளது.

நிர்வாகச் செயல்பாடுகளை மாற்றியமைப்பதன் மூலமே மாற்றங்களை கொண்டு வர முடியும். நமது மனப்போக்கில் மாற்றங்களை கொண்டு வராமல் நமது நிர்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டு வரமுடியாது. மாற்றங் களுக்குரிய எண்ணங்கள் இல் லாமல் மனப்போக்கில் மாற்றங் களை கொண்டு வர முடியாது. நாங்கள் சட்டங்களை மாற்றி அமைக்க இருக்கிறோம். தேவை யில்லாத நடைமுறைகளை நீக்க வும், தொழில்நுட்ப மேம்பாடுகளை யும் கொண்டு வர இருக்கிறோம். மாற்றம் என்பது நிர்வாகத்தில் உள்ளேயும் வெளியேயும் கொண்டு வர அரசு முனைப்பாக உள்ளது.

ஒவ்வொரு நாடும் தனி அனு பவங்களையும் வளங்களையும் வலிமையையும் கொண்டிருக் கிறது. அதேபோல் ஒவ்வொரு நாடும் அதற்குரிய நடவடிக்கைகளால் உலகத் தரத்திற்கு வந்துள்ளது அல்லது அதற்கு கீழேயும் சென்றுள்ளது. உள்மாற்றமும் நமக்கு தேவைப்படுகிறது. அதற்கான வழிமுறைகள் பற்றி இளம் தலைமுறையினர் கண்டறிய வேண்டும். எப்படி வித்தியாசமாக அரசாங்கத்தை வழிநடத்திச் செல்லலாம் என்பது குறித்து யோசிக்க வேண்டும். ஏனெனில் நீண்ட காலத்திற்கு இந்த பழைய சிந்தனையை வைத்துக் கொண்டு நிர்வாகத்தை நடத்த முடியாது.

நடைமுறை நிர்வாகம் சார்ந்த மனப்போக்கில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இந்திய ஜனநாயகத்தில் மாற்றங்களை கொண்டு வர கூடுதல் முயற்சிகளை செய்ய வேண்டி உள்ளது. புத்தகத்தில் இருந்தோ கட்டுரைகளில் இருந்தோ நாம் புதிய சிந்தனைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நமது சிந்தனைகளை தூண்டக் கூடியது புத்தகங்கள் மட்டுமே. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

வளங்களை கண்டறிய வேண்டும்

இந்தியாவில் கண்டறியப் படாமலும் பயன்படுத்தப்படாமலும் அதிக வளங்கள் உள்ளன. அவை கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் துணை பிரதமர் தருமன் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 8 முதல் 10 சதவீத வளர்ச்சி தேவை. அப்போதுதான் தனிநபர் வருமான இடைவெளியை குறைக்கமுடியும். இந்தியா வேகமாக அதன் திறனை அடைய தைரியமான பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை. 8 முதல் 10 சதவீத வளர்ச்சி என்பது சொகுசான வளர்ச்சி கிடையாது.

சீனாவை விட தனிநபர் வரு மானத்தில் இந்தியா இரண்டரை மடங்கு குறைவாக உள்ளது. ஆனா லும் இந்த வளர்ச்சி இந்தியாவால் அடையக்கூடியதே. குறிப்பாக இந்தியா தனது வளங்களை கண்டறிந்து அவற்றை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT