வணிகம்

சுநீல் பார்தி மிட்டல் - இவரைத் தெரியுமா?

செய்திப்பிரிவு

$ தொழிலதிபர், கொடையாளர் என பன்முகம் கொண்ட இவர், பார்தி எண்டர் பிரைசஸ் குழுமத்தை உருவாக்கி அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

$ தொலைத் தொடர்பு, சில்லறை வர்த்தகம், நிதிச் சேவை, வேளாண் உள்ளிட்ட பல தொழில்களில் இக்குழுமம் ஈடுபட்டுள்ளது. குழுமத்தின் பிரதான நிறுவனமான ஏர்டெல் சர்வதேச அளவில் பிரபலமானது. தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சேவை அளித்து வருகிறது. சிங்டெல், சாஃப்ட்பேங்ஸ், ஏஎக்ஸ்ஏ, டெல் மோன்ட் என்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

$ 56 வயதான இவர் லூதியானாவில் பிறந்து பஞ்சாப் பல்கலை மற்றும் ஹார்வர்ட் பல்கலையில் பயின்றவர். இப்போது சர்வதேச வர்த்தக சபை (ஐசிசி) தலைவராக உள்ளார். பிரதமரின் தொழில் மற்றும் வர்த்தகம் மற்றும் உலக பொருளாதார அமைப்பு, சர்வதேச வர்த்தகக் கவுன்சில், சர்வதேச தொலைத் தொடர்பு சங்கம் (ஐடியு) உள்ளிட்டவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்.

$ நாட்டின் உயரிய விருதான பத்மபூஷண் விருதைப் பெற்றுள்ளார். சர்வதேச கர்னெகி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார்.

$ ஒரு நிறுவனம் எந்தப் பகுதியில் செயல்படுகிறதோ அந்தப் பகுதி மக்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். இதன் வெளிப்பாடாக பார்தி அறக்கட்டளை மூலம் 254 பள்ளிகளில் 39 ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறார்.

$ உலகின் தயாள குணம் கொண்டவர்கள் வரிசையில் 25-வது இடத்தைப் பிடித்துள்ளார் இவர்.

SCROLL FOR NEXT