வணிகம்

ஷிகா சர்மா ராஜினாமா? ஆக்ஸிஸ் விளக்கம்

செய்திப்பிரிவு

தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஷிகா சர்மா ராஜினாமா செய்ததாக சமூக வலைத்தளங் களில் செய்தி வெளியானது. ஆனால் ஆக்ஸிஸ் வங்கி இந்த தகவலை மறுத்திருக்கிறது. இது தவறான தகவல். இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பதற்றமடைய தேவையில்லை என ஆக்ஸிஸ் வங்கி பிஎஸ்இ-க்கு தெரிவித்திருக்கிறது.

ஆக்ஸிஸ் வங்கியின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இல்லை. தவிர பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது ஆக்ஸிஸ் வங்கியின் சில கிளைகளில் முறை கேடு நடந்திருக்கிறது. இது குறித்து வருமான வரித்துறை விசாரித்து வருகிறது. மேலும் கோடக் மஹிந்திரா வங்கியுடன் ஆக்ஸிஸ் வங்கி இணைகிறது என்னும் செய்தியும் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் ஷிகா சர்மா ராஜினாமா என்னும் செய்தி வெளியான உடனே வங்கி நிர்வாகம் அந்த தகவலை மறுத்திருக்கிறது.

சிஇஓ ராஜினாமா செய்ய வில்லை என்னும் தகவல் வெளி யானவுடன் நேற்றைய வர்த்தகத் தியே ஆக்ஸிஸ் பங்குகள் உயர்ந்தன. ஆனால் வர்த் தகத்தின் முடிவில் 0.58 சதவீதம் சரிந்தது.

SCROLL FOR NEXT