வணிகம்

பிரமிட் சாய்மீரா உள்ளிட்ட 20 பங்குகளை நீக்குகிறது என்எஸ்இ

செய்திப்பிரிவு

முக்கிய பங்குச் சந்தையான என்எஸ்இ, பிரமிட் சாய்மீரா உள்ளிட்ட 20 பங்குகளை வரும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் வர்த்தகத்தில் இருந்து நீக்குகிறது. இந்த நிறுவனங்கள் தங்களது தொழில்களை மூடும் திட்டத்தில் உள்ளன.

அல்பிக் பைனான்ஸ், பிஐஎல் இண்டஸ்ட்ரீஸ், பிஎஸ் ரெபிரிஜிரேட்டர், கேபிடல் பைனான்ஸியல் சர்வீசஸ் உள்ளிட்ட 20 நிறுவன பங்குகளை நீக்க முடிவெடுத்திருக்கிறது. முன்னதாக இம்மாதம் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் 14 பங்குகளை நீக்கப்போவதாக என்எஸ்இ அறிவித்தது. கடந்த ஏப்ரலில் 80 நிறுவன பங்குகளை கட்டாயம் வர்த்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அந்த பங்குகளில் பல காலமாக வர்த்தகம் ஏதும் நடக்கவில்லை என்றும் என்எஸ்இ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT