வணிகம்

`உலகில் வேகமாக வளரும் சாக்லேட் சந்தை இந்தியா’

செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் இந்திய சாக்லேட் சந்தை வேகமாக வளர்ந்து வருவதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. லண்டனைச் சேர்ந்த மின்டெல் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. மற்ற முக்கிய நாடுகளில் சாக்லேட் சந்தை மந்தமாக இருக்கும் சூழ்நிலையில், 2016-ம் ஆண்டில் சாக்லேட் சந்தை 13 சதவீதம் இந்தியாவில் வளர்ச்சி அடைந்திருப்பதாக மின்டெல் தெரிவித்திருக்கிறது. 2016-ம் ஆண்டில் 2.28 லட்சம் டன் சாக்லேட் விற்பனையாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் 95,000 டன் மற்றும் இந்தோனேஷியாவில் 94,000 டன் சாக்லேட் விற்பனையாகி இருக்கிறது.

கடந்த ஆண்டில் இந்தியா (13%) மற்றும் போலந்து (2%) ஆகிய இரு நாடுகளில் மட்டுமே சாக்லேட் சந்தை வளர்ந்திருக்கிறது.

அதேபோல மிட்டாய் வகை பிரிவிலும் வளர்ந்த நாடுகளில் ஏற்றம் இல்லாமல் இருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட வளர்ந்துவரும் நாடுகளில் விற்பனை நன்றாக இருப்பதாக மின்டெல் தெரிவித் துள்ளது. கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மிட்டாய் பிரிவு இந்தியாவில் ஆண்டுக்கு 19.9 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. வரும் 2020-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 20.60 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் மின்டெல் கணித்திருக்கிறது.

SCROLL FOR NEXT