வணிகம்

நெஸ்லே நிகர லாபம் 8.6% சரிவு

செய்திப்பிரிவு

எப்எம்சிஜி துறையை சேர்ந்த நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 8.66 சதவீதம் சரிந்து ரூ.167 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.183 கோடியாக நிகர லாபம் இருந்தது.

அதே சமயம் நிறு வனத்தின் நிகர விற்பனை 16.17 சதவீதம் உயர்ந்தது. கடந்த ஆண்டு ரூ.1,946 கோடியாக இருந்த விற்பனை இப்போது ரூ.2,261 கோடியாக இருக்கிறது. இந்த காலாண்டில் நிறுவனத்தின் செலவுகள் 15.99 சதவீதம் உயர்ந்துள்ளன. ரூ.1,661 கோடியாக இருந்த செலவுகள் இப்போது ரூ.1,927 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 0.38 சதவீதம் சரிந்து ரூ.6,169 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிவடைந்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT