உலகப் பொருளாதார உச்சமும் வீழ்ச்சியும், மாற்றமும் ஏற்றமும் மிக முக்கியமான நான்கு காரணிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மூன்று தலைசிறந்த அறிஞர் கள் இந்த புத்தகத்தின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்கள். வல்லுநர்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும், மேலாண்மை உத்திகளை உருவாக்கு பவர்களுக்கும் இந்த புத்தகம் மிகவும் அவசியம். உலகளாவிய மாற்றங்கள், நகரமயமாக்கலின் வாய்ப்புகள், சீனா வின் சேமிப்பு விகிதம், நாளைய வேலைவாய்ப்புகளில் தொழில்நுட்பத் தின் தாக்கம் ஆகியவைகளை பற்றி விரிவாக எடுத்துக்கூறுவதுடன் மாறும் உலகத்தில் எவ்வாறு பயணிப்பது என்பதை பற்றிய கருத்துகளையும் அறியத் தருகிறது.
உலகளாவிய மாற்றங்கள்
புதியதோர் உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. பேச்சு வழக்கில் உள்ளது போல உலகப் பொருளாதாரம் மாற்றி எழுதப்பட்டுவருகிறது. வளரும் சந்தைகளில் நகரமயமாக்கல் நடை பெற்று வருகிறது. பொருளாதார செயல் பாடுகளும் சுறுசுறுப்பான செயல் வடி வங்களும் சந்தைகளை ஈர்க்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி வேகப்படுத்தப் பட்டு அதனுடைய இலக்கு அளவு பொருளாதார நிச்சய தன்மை ஆகியவை வரையறுக்கப்படுகின்றன. மேற் கூறியவையின் தொடர்ச்சியாக வயதானவர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போகின்றது.
வர்த்தகம், மூலதன பரிமாற்றங்கள், மனிதர்கள், தகவல்கள் மற்றும் தரவுகள் ஆகியன உலகத்தின் பல முனைகளையும் இணைக்கின்றது. தொழில் புரட்சி வியக்கத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், உலகளாவிய மாற்றங்கள் அதனை பின்னுக்கு தள்ளி வளர்ச்சியை விரைவாக்குகின்றன. நகரமயமாக்கல் பயன்பாடு, தொழில்நுட்பம், போட்டி, முதுமை, தொழிலாளர்கள் போன்றவை ஒன்று கூடி வளர்ச்சிக் காரணிகளாக காட்டப்பட்டு வெகு வேகமாக உரு மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் நம்முடைய கற்பனைக்கு மட்டும் சவால் விடுவதாக இல்லை. நம்முடைய திறமைகளுக்கும் சக்திகளுக்கும் சவால் விடுவதாகவே இருக்கின்றது.
நகரமயமாக்கலின் வாய்ப்புகள்
2010 முதல் 2025 வரை வளரும் நாடுகளில் உள்ள 440 நகரங்கள் உலக ஜிடிபி வளர்ச்சியில் 50 சதவீதம் வரை பங்களிக்கும். 20 விழுக்காடுகளுக்கும் குறைவான ஷாங்காய், மும்பை, ஜகார்தா, லகோஸ் போன்ற நகரங்களின் பெயர்கள் நினைவில் நிற்கின்றன. ஆனால், சூரத், ஃபொஷான் மற்றும் போர்டோ அலகிரே (PORTO ALEGRE) என்ற மூன்று பெயர்கள் உலக நாடு களில் எத்தனை பேர் வாயில் நுழையும். சுமார் 40 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகையும் அதிவேக பொருளாதார வளர்ச்சியும் இந்த மூன்றிலும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆண்டு வாக்கில் மேட்ரிட் மிலன் (MADRID MILAN) மற்றும் ஜூரிச் போன்ற நகரங்களை பின்னுக்கு தள்ளி வளர்ச்சியிலும் பொருளாதார பங்களிப்பிலும் இந்த நகரங்கள் அதி வேகமாக முன்னேறி இருக்கும். நகரமயமாக்கல் இந்த நகரங்களில் பெரும் அளவு பங்களிப்பை பெறுவதால் வளர்ச்சிக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
சீனாவின் சேமிப்பு விகிதம்
1960 மற்றும் 70 களில் இருந்ததை போன்ற வறுமையும், பஞ்சமும், வசதியின்மையும் சீனாவில் இன்று தொலைந்து போய்விட்டன. சேமிப்பு, சீன பொருளாதாரத்தை வலிமை மிக்கதாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. மூலதனத்தை வளர்ப்பதை மூச்சாகக் கொண்டு இருக்கிறார்கள். உலகளவில் சேமிப்பில் தலைசிறந்து, சேமிப்பு விகிதத்தை 37 சதவீதமாக இருந்ததை 50 சதவீதமாக உயர்த்தி இருக்கிறார்கள் (GDP 2000 2008 வரை). 2008-ம் ஆண்டு சேமிப்பு 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உருமாறி உலகின் மிக அதிக சேமிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு உலகளாவிய மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணியாகும்.
தொழில்நுட்பம் நாடுகளிடையே பணி யமர்த்துபவர்களிடையே வெவ்வேறு பிரிவினரிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. பணியமர்த்து வது, யாரை? எங்கே? எப்படி? என்ற முறைகள் வெகுவேகமாக மின்னணு முறையில் மாறிவருகிறது. திறமை களுக்கு பதிலாக தொழில்நுட்பத்தை எவ்வாறு மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் பணியாளர்களை எவ்வாறு மாற்றி பயன் படுத்தலாம் என்றும் ஆராய்ந்து, மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 2015ம் ஆண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் வேலை இழந்த பணியாளர் கள் செய்த பணிகளை காட்டிலும் மிகவும் வேறுபட்டு இருந்தன. 2008ல் வேலை இழந்தவர்கள் 2014-ல் அதே வேலையை தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை அதுதான் எதிர்கால வேலை வாய்ப்புகளில் தொழில்நுட்ப தாக்கம் என்பதாகும்.
வேலைகளின் தன்மை வெகுவாக மாற்றப்பட்டு அவைகளை ஏற்றுக் கொள் ளக்கூடிய பக்குவத்திற்கு ஆகும் நேரம் வெகுவாக சுருக்கப்பட்டு பணி யாளர்கள் தொழில்நுட்ப பலத்தை எதிர் கொள்ளமுடியாமல் தத்தளிப்பதை கண்கூடாக காண்கின்றோம். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கருவிகளை பயன்பாட்டில் மேம்படுத்திக் கொள்வது அவசியம் ஆகின்றது. உதாரணமாக வலைதளம், மின்னணு வணிகம், சமூக வலைதளங்கள் ஆகியன ஆண்டு தோறும் அளப்பறிய மாற்றங்களையும் புதிய செயலிகளை யும் ஏற்று மாறிக்கொண்டே இருக் கின்றன. இதில் ஒரு ஆறுதலான செய்தி என்னவென்றால் அதிவேகமான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மாற்றங் கள் உள்வாங்கப்பட்டு கடின உழைப் பினால் தக்கவைக்கப்படுகின்றன. சமீபகாலத்தில் ஏற்பட்ட மாறுதல்களை சபித்துக் கொண்டே ஏற்றுக் கொண்டவர்கள்தான் அதிகம். அந்த சபித்தல் சகிப்பு தன்மையை ஏற்படுத்தி தொழில் நுட்பத்திற்கு ஏற்புடையதாக பணியாளர்களை மாற்றியது.
புதிய உலக பயணம்
வெகு வேகமாக வளரும் சந்தைகளில் கீழ்காணும் நான்கு குணாதிசயங்களை நிறுவனங்கள் பகிர்ந்துக் கொள்கின்றன.
நகரங்களையும் நகர கற்றல்களையும் நோக்கி தங்களுடைய மூலதனத்தையும் திறமைகளையும் செலுத்துகிறார்கள். புதிய பகுதிகளையோ நாடுகளையோ கண்டுபிடித்து செல்லுவது இல்லை. புதிய நாடுகளும் புதிய பகுதிகளும் வியாபாரம் தலை எடுக்க அதிக நாட்களை விழுங்கும். அதை தவிர்க்க வளர்ச்சி முகம் கொண்ட நகரங்களையும். கூட்டான நகரங்களையும் கண்டறிந்து சந்தைகளை நிறுவி அதிக லாபம் ஈட்ட நிறுவனங்கள் முயல்கின்றன.
தனிபயனாக்கமும், விலையும் உள்ளூர் தேவைகளுக்கும் சுவைகளுக் கும் ஏற்ப மாற்றி குறைந்த செலவில் கொண்டு சேர்த்து புதுமை படைக்கும் வியாபார மாதிரிகளை உருவாக்கி குறைந்த விலையில் அதிக பயன் பெறும் வகையில் செயல்பாடுகளை நிறுவனங்கள் ஏற்படுத்துகின்றன.
வடிவமைப்பும் கட்டுப்பாடும் பல வழிகளை சந்தை படுத்துவதற்காக உருவாக்கி அவைகளை மறு பரிசீலனை செய்து வியாபார குறியீடுகளை வளர்த்து சந்தை படுத்துதலையும், விற்றலையும் அதிகப்படுத்த உத்திகளை உருவாக்கி நிறுவனங்கள் புதிய உலகிற்கு இணைப்புகளை ஏற்படுத்துகின்றன.
நிறுவன வடிவமைப்பு திறன் உத்திகள், செயல்படும் வழக்கங்கள் ஆகியவைகளை இடத்திற்கும் நிறுவனங் களுக்கும் தக்கவாறு மாற்றி உத்திகளை ஏற்படுத்தி புதிய உலகையும், புதிய சந்தைகளையும் வசப்படுத்த நிறுவனங்கள் பெரிதும் பாடுபடு கின்றன.
நிறுவன மேலாளர்கள், தொழில் முனைவோர், உத்திகளை உருவாக்கு வோர் என்ற பலதரப்பட்ட மேலாண்மை பங்களிப்பாளர்களுக்கு இந்த புத்தகம். மிகவும் அவசியமான ஒன்று. ரிச்சர்டு டாப்ஸ், ஜேம்ஸ் மனேகா மற்றும் ஜேனாதன் வோட்ஸெல் என்ற மூன்று இயக்குனர்களும், உலக நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் எழுதப்பட்ட இந்த புத்தகம் நம்மில் பலருக்கும் பயன்படலாம். புத்தகத்தில் உள்ள செய்தியை கூறியது குறைவு, படித்தால் ஏராளம்.
தொடர்புக்கு: rvenkatapathy@rediffmail.com