வணிகம்

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் காணிக்கை செலுத்தும் வசதி: ஹெச்டிஎப்சி வங்கி அறிமுகம்

செய்திப்பிரிவு

ரொக்க பரிவர்த்தனை இல்லாத சூழலை நோக்கிய பயணத்தின் ஒரு கட்டமாக பக்தர்கள் கடவுளுக்கு செலுத்த வேண்டிய காணிக்கையை மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தும் வசதியை ஹெச்டிஎப்சி வங்கி ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மற்றும் வேளிமலை குமாராசாமி கோயில் உள்ளிட்ட 5 கோயில்களில் இந்த வசதி வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வருவதாக ஹெச்டிஎப்சி வங்கியின் தமிழ்நாடு மண்டல மூத்த துணைத் தலைவர் ஆர். சுரேஷ் தெரிவித்தார்.

பண மதிப்பு நீக்க நடவடிக் கையால் பணப் புழக்கம் குறைந்துள்ளது. பொதுவாக கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள், கடவுளுக்கு காணிக் கையை ரொக்கமாக அங்குள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம். பணத் தட்டுப்பாடு நிலவும் சூழலில் மின்னணு பரிவர்த்தனைக்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை ஒத்துழைப் போடு முதல் கட்டமாக 5 கோயில்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, க்யூஆர் கோட் மூலம் செல்போனில் செலுத்தும் வசதி, எம்-பெசா உள்ளிட்ட பண பரிவர்த்தனை மூலம் காணிக்கைகளை செலுத்தலாம்.

ஒரு ரூபாய் முதல் அதிகபட்சம் தங்கள் கார்டுகளில் உள்ள வரம்புத்தொகை வரை காணிக்கையாக செலுத்த முடியும். ஒரு சிலருக்கு அதிகபட்சம் ஒரு நாளைக்கு கார்டு மூலம் ரூ. 2 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யும் வசதி இருக்கும். இவர்கள் விரும்பினால் அதிகபட்ச தொகையைக் கூட காணிக்கையாக செலுத்த முடியும்.

முதல் கட்டமாக ஒவ்வொரு ஆலயங்களிலும் 2 இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கோயில் பணியாளர்கள் நிர்வகிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

எந்த இடத்திற்கும் எடுத்துச் செல்லும் வகையில் ஜிபிஆர்எஸ் மூலம் செயல்படும் கருவி ஒன்றும் மற்றொன்று தொலைபேசி வழி இணைப்பில் செயல்படும் கருவி ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் தேவையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். ஸ்மார்ட்போன் மூலம் காணிக்கை அளிக்க விரும்பு வோரின் வசதிக்காக க்யூஆர் கோட் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வசதி அளிக்கப்பட் டுள்ள ஆலயங்கள் அனைத்துமே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்குபவை. மேலும் பல கோயில்களில் இதுபோன்ற வசதியை ஏற்படுத்தித் தர திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

SCROLL FOR NEXT