முக்கிய இ-டெய்ல் நிறுவனமான ஸ்நாப்டீல், பேடிஎம் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களிடம் கணிசமான பங்குகளை விற்கத் திட்டமிட்டிருப்பதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியானது. ஆனால் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை மறுத்திருக்கிறார். இது அடிப்படை ஆதாரமற்ற தகவல். எங்களுடைய அனைத்து முயற்சிகளும் நிறுவனத்தை லாபமீட்டும் நடவடிக்கையை நோக்கி இருக்கிறது. அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என அவர் கூறினார்.
ஆனால் கடந்த மாதம் ஸ்நாப்டீல் நிறுவனத்தை பேடிஎம் நிறுவனத்துடன் இணைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்துவருகிறது என செய்தி வெளியானது. இந்த இரு நிறுவனங்களிலும் பொதுவான முதலீட்டாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிளிப்கார்ட் மற்றும் பேடிஎம் நிறுவனங் கள் கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை. ஸ்நாப்டீல் நிறுவனம் இதுவரை 200 கோடி டாலர் நிதி திரட்டி இருக்கிறது. இதில் 90 கோடி டாலர் சாப்ட்பேங்க் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.
நிறுவனத்தின் வருமானத்தை விட நஷ்டம் இரு மடங்கு அதிகமாகும்.