2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையாக 21,000 புள்ளிகளை கடந்துள்ளது. 262 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 21,000 புள்ளிகளாக வர்த்தகமாகியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., பாரத ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல் பங்குகள் வர்த்தகம் லாப போக்கில் இருப்பதாலும்,அதிக அளவில் அந்நிய முதலீடுகள் வந்ததுமே சென்செக்ஸ் உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சென்செக்ஸ் 21,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளதாக பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்கள் சற்று மந்தமாக இருந்த பங்கு வர்த்தகம், இன்று காலை வர்த்தக துவக்கத்தில், சென்செக்ஸ் 80.66 புள்ளிகள் உயர்ந்து 20,848.54 புள்ளிகளிலும்,நிஃப்டி 34.05 புள்ளிகள் உயர்ந்து 6,212.40 புள்ளிகளிலும் வர்த்தகமாகியிருந்தது.