நியூடெல்லி டெலிவிஷன் லிமிடெட் (என்டிடிவி) நிறுவனம் வர்த்தக செய்திகளுக்காக தனியாக நடத்தி வந்த என்டிடிவி பிராஃபிட் எனும் சேனலை மூட முடிவு செய்துள்ளது. இதற்குப் பதிலாக என்டிடிவி ஆங் கில செய்தியுடன் வர்த்தக செய்தி களையும் சேர்த்து அளிக்க முடிவு செய்துள்ளது. ஜூன் 5-ம் தேதி முதல் வர்த்தக செய்திகள் என்டிடிவி 24X7 சேனலில் பார்க்கலாம்.
என்டிடிவி பிராஃபிட் சேனல் பொழுதுபோக்கிற்காக என்டிடிவி பிரைம் எனும் சேனலையும் நடத்துகிறது. ஜூன் 5-ம் தேதி முதல் தனி சேனலாக என்டிடிவி பிரைம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
உரிய சமயத்தில் இந்த சேனலை மீண்டும் தொடங்குவது குறித்து ஆராயப்படும் என்று என்டிடிவி இணை தலைவர் பிரணாய் ராய் தெரிவித்துள்ளார்.