நஷ்டத்தில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது, ஆனால் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை என மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய விமான நிறுவனம் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
`இந்தியா டுடே’ கருத்தரங்கில் இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய விமான நிறுவனம் தேவை. அதனால் ஏர் இந்தியா இந்த பட்டியலில் இல்லை. ஆனால் இந்த நிறுவனம் தன்னுடைய செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். நிதி, வழித்தடங்கள் என பல வழிகளில் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.