இந்திய நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் நிதி திரட்டுவதில் தீவிரமாக இருக்கின் றன. வரும் மாதங்களில் ஐபிஓ மூலம் ரூ.20,000 கோடியை திரட்ட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த நிதியை விரிவாக்கம், கடன் களைத் திருப்பி செலுத்துதல் உள் ளிட்டவற்றுக்கு பயன்படுத்த நிறு வனங்கள் திட்டமிட்டுள்ளன.
சில நிறுவனங்கள் பட்டியலிடுவ தன் மூலம், ஏற்கெனவே முதலீடு செய்த முதலீட்டாளர்கள் வெளி யேறுவதற்கு வாய்ப்பு கொடுப்பது, நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு உயர்வது உள்ளிட்ட சில காரணங் களுக்காகவும் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளன.
ஹட்கோ, என்எஸ்இ, சிடிஎஸ்எல், கொச்சின் ஷிப்யார்டு உள்ளிட்ட சில முக்கியமான நிறுவனங்கள் வரும் மாதங்களில் பொதுப்பங்கு வெளியிட திட்டமிட்டுள்ளன. இப்போதைக்கு ஹட்கோ, சிடிஎஸ்எல், எஸ்.சந்த், ஜெனிசிஸ் கலர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதற்கு செபியின் அனுமதி கிடைத்துள்ளது.
இதைத் தவிர ஜிடிபிஎல் ஹாத்வே, என்எஸ்இ, பாரத் ரோடு நெட்வோர்க், தேஜாஸ் நெட்வோர்க், எரிஸ் லைப்சயின்சஸ், பிஎஸ்பி புராஜக்ட்ஸ், பிரதாப் ஸ்நாக்ஸ் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் செபியின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. மொத்தமாக இந்த அனைத்து நிறுவனங்களும் சுமார் 20,000 கோடி ரூபாயை ஐபிஓ மூலம் திரட்டும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுதவிர எஸ்பிஐ லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் விரைவில் ஐபிஓ வெளியிடுவதற்கு விரைவில் செபியை அணுகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
நடப்பு ஆண்டில் இதுவரை பிஎஸ்இ, அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் உள்ளிட்ட இந்து பொதுப்பங்கு வெளியீடுகள் நடந்து முடிந்திருக்கின்றன.
என்எஸ்இயில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் சுமார் 25 சதவீதம் வரை பங்குகளை விலக்கி கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு நிதி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஐபிஓகளில் பெரிய ஐபிஓவாக இது இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
குவான்டம் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் இயக்குநர் ஐவி சுப்ர மணியம் கூறும்போது, கவர்ச்சிகர மான விலையில் இருக்கும் ஐபிஓகளுக்கு முதலீட்டாளர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக் கின்றனர். பங்குக்கு அதிக விலை நிர்ணயம் செய்யும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் அந்த பங்கில் கவனம் செலுத்துவதில்லை என கூறினார்.
கடந்த 2016-ம் ஆண்டு 26 நிறுவனங்களின் பொதுப்பங்கு வெளியீடு செய்தன. இதன் மூலம் ரூ.26,000 கோடி நிதி திரட்டப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த தொகை அதிகமாகும்.