வணிகம்

இவரைத் தெரியுமா?- சஞ்சய் குப்தா

செய்திப்பிரிவு

இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். கடந்த 2015-ம் ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பை வகிக்கிறார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கி இந்திய தொழில் நுட்ப கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

பெட்ரோ ரசாயனத் துறை மற் றும் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை மேலாண்மையில் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்.

இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் பொறுப்பிலும் இதே நிறுவனத்தில் வர்த்தகப் பிரிவு பொது மேலாளர் மற்றும் வர்த்தகப் பிரிவு இயக்குநர் பொறுப்பிலும் பணியாற்றியவர்.

நைஜீரியாவில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் செயல்திட்டத்திற்கு தலைமை வகித்தவர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT