முன்னணி கட்டுமான நிறுவ னமான யுனிடெக் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வீடுகளைக் கட்டித் தருவதில் கால தாமதம் செய்ததற்காக அந்நிறுவனத்துக்கு ரூ.16.55 கோடி அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிறுவனத்தில் வீடு வாங்க முன்பதிவு செய்த 39 பேருக்கு உரிய காலத்தில் ஒப்புக் கொண்ட படி வீடுகளை கட்டி ஒப்படைக்க தவறிவிட்டது. இதை எதிர்த்து வாடிக்கையாளர்கள் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
39 வாடிக்கையாளர்கள் அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு செலுத்திய தொகை ரூ. 16.55 கோடியாகும். 2010-ம் ஆண்டிலிருந்து இப்போது வரையான காலத்துக்கு ஆண் டுக்கு 14% வரை வாடிக் கையாளர்கள் செலுத்திய தொகைக்கு வட்டி அளிக்க வேண் டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி ஆண்டுக்கு 14 சதவீதம் வட்டித் தொகை கணக்கிட்டால் அது ரூ. 16.55 கோடி வருகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் செலுத்திய முன் பணத்துக்கு இணையான அளவுக்கு அவர்களுக்கு வட்டி யுடன் சேர்ந்து திருப்பி அளிக்க வேண்டும். இத்தொகையில் 90% அடுத்த 8 வாரங்களுக்குள் அதாவது 2 மாதத்திற்குள் திரும்ப அளிக்க வேண்டும் என்று நீதி பதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிறுவனத்தின் விஸ்டா புராஜெக்ட் எனும் அடுக்கு மாடி குடியிருப்புத் திட்டத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு ரூ.16.55 கோடியை அளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது யுனிடெக் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி, வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வீடுகள் ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இத்திட்டப் பணியை முடிக்க நிறுவனத்துக்கு 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
ஆனால் நிறுவனத்தின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க வில்லை. கால அவகாசம் அளிக்க முடியாது என்று நீதிபதி கள் கூறிவிட்டனர். மேலும் கால அவகாசம் கேட்பது இந்த வழக்கை இழுத்தடிக்கும் நட வடிக்கையே தவிர, கட்டுமான பணிகளை உரிய காலத்தில் அளிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஏற்கெனவே பல கட்டங்களாக வழக்குகளை நடத்தி வாடிக்கையாளர்கள் சோர்ந்துவிட்டனர் என்று நீதி பதிகள் குறிப்பிட்டனர்.