வணிகம்

இந்தியா சிமென்ட்ஸ் லாபம் ரூ. 44 கோடி

செய்திப்பிரிவு

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ. 44 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தைக் காட்டிலும் தற்போது 16.34 சதவீதம் கூடுதலாகியுள்ளது. முந்தைய ஆண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ. 37 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் வருமானம் ரூ. 1,205 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ. 1,225 கோடியாக இருந்தது. அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் முடக்கப்பட்டுள்ள ரூ. 120 கோடி மதிப்பிலான சொத்துகளை சட்ட ஆலோசனைக்குப் பிறகு மீட்க நடவடிக்கை எடுக்கவும் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆலைகளின் மொத்த உற்பத்தித் திறனில் 65% அளவுக்கே முதல் காலாண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் முந்தைய ஆண்டு இதே காலத்தில் உற்பத்தி 58 சதவீத அளவுக்கு இருந்தது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT