* மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனமான சலோரா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 1992-ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.
* 1987-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்தார். அதன் பிறகு துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
* மின்னணு துறையில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர். சர்வதேச தரத்திலான 7 தயாரிப்பு ஆலைகளை வைத்துள்ளார்.
* உற்பத்தி, சந்தையிடுதல் நிதியியல் துறையில் வல்லுநர். பானசோனிக் இந்தியா நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர்.
* எஸ்ஏபி எலெக்ட்ரானிக்ஸ், எப்எக்ஸ் இன்போ டெக்னாலஜீஸ், சலோரா புளோரிடெக், ஜடோநெட் எலெக்ட்ரானிக் ரிசர்ச் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
* மும்பையில் உள்ள சைடென்ஹாம் கல்லூரியில் பிகாம் பட்டம் பெற்றவர். * தொழில் நிறுவனங்களின் ஆராய்ச்சி துறை கூட்டமைப்பான பிஹெச்டி சேம்பரின் தலைவராகவும் உள்ளார்.