பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு போலியான ஆவணங்கள் மூலம் வங்கிகளில் ரூ.1 கோடி வரை பணத்தை மாற்றிய தொழிலதிபரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சூரத்தைச் சேர்ந்த கிஷோர் பாஜிவாலா என்கிற தொழிலதிபர் போலியான ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி வரை பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றியுள்ளார். இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ள அமலாக்கத்துறை அவரை, தடுப்பு மற்றும் பண மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக கூறியுள்ளது. நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மத்திய புலனாய்வு துறையின் விசாரணை அடிப்படையில் அவர் மீதும் அவரது குடும்ப உறுப்பினர் கள் சிலர் மீதும் அமலாக்கத்துறை கிரிமினல் வழக்கு பதிவு செய்துள் ளது. வருமான வரித்துறை சோதனை யில் அவரது வீட்டிலிருந்து கணக் கில் காட்டப்படாத ரொக்கம் மற்றும் தங்கத்தையும் பறிமுதல் செய்துள் ளது. டீ கடை வைத்திருந்த பாஜி வாலா சில நாட்களில் பைனான்சி யராக மாறியதும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு பாஜிவாலாவின் குடும்பத்தினர் பலரும் கணக்கில் காட்டப்படாத பழைய ரூபாய் நோட்டுகளை 2,000 ரூபாயாக மாற்றியுள்ளனர். போலியான ஆவணங்களை தயாரித்து வங்கி அதிகாரிகள் துணையுடன், போலியான நபர்கள் மூலம் பணத்தை மாற்றியுள்ளனர். அவரது வீடு, கடைகள் மற்றும் வங்கி லாக்கர்களில் சோதனை செய்தபோது சுமார் 1.02 கோடிக் கும் அதிகமான புதிய ரூபாய் நோட்டுகளை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது. இவர் பினாமி கள் பெயரில் பல சொத்துகளை வைத்துள்ளதையும் அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.
சூரத் மக்கள் கூட்டுறவு வங்கியின் உதான் கிளை மேலாளர் பி பாட் என்பவருடன் சேர்ந்து பாஜிவாலா குடும்பம் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ளது. வங்கி யின் கேவொய்சி படிவத்தை வங்கிக்கு வெளியே பல ஜெராக்ஸ் மையங்களில் எடுத்து போலி ஆவணங்களை தயார் செய்துள்ள னர். இந்த வகையில் பாஜிவாலா குடும்பம் 1000 போலி அடையாள ஆவணங்களை உருவாக்கியுள்ள னர். சுமார் 200க்கு மேற்பட்ட ஆவணங்கள் வழியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இந்த வங்கியில் மாற்றியுள்ளனர்.
வருமான வரித்துறை ரூ.1.45 கோடி கைப்பற்றியுள்ளது. இதில் 1.05 கோடி புதிய நோட்டுகளாகும். சுமார் 4.49 கோடி அளவுக்கு தங்கம், ரூ. 1.28 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்களையும் கைப்பற்றியுள்ள னர். சுமார் ரூ.10.50 கோடி சொத்து களை பாஜிவாலா குடும்பம் கணக் கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.