ஸ்மார்ட்போன் மூலமாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது கடந்த ஒரு வருடத்தில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. மொத்தமாக பார்க்கும் போது மொபைல் வர்த்தகத்தின் அளவு குறைவாக இருந்தாலும் மொபைல்போன் மூலமான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பிஎஸ்இ தகவல்கள் படி கடந்த ஜூன் மாதத்தில் மொபைல் மூல மான வர்த்தகம் 2.12 சதவீதமாக இருக்கிறது. 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்த வர்த்தகத்தில் 0.74 சதவீதம் மட்டுமே மொபைல் மூலம் நடந்தது. அதேபோல என்எஸ்இ-யின் மொத்த வர்த்தகத் தில் 3.32 சதவீதமாக இருக்கிறது.
பிஎஸ்இ-யில் கடந்த ஜூன் 2012-ம் ஆண்டு 0.03 சதவீத வர்த்தகம் மட்டுமே மொபைல் மூலம் நடந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூனில் 0.39 சதவீதம் மட்டுமே இருந்தது.
கடந்த ஜூன் மாதம் என்எஸ்இ தகவல் படி ரூ.12,732 கோடிக்கு மொபைல் மூலமாக வர்த்தகம் நடந்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு மொபைல் மூலமான பங்கு வர்த்தகத்துக்கு செபி அனுமதி வழங்கியது. ஆரம்ப கட்டத்தில் தங்களது டீலர்கள் மூலமே வர்த்தகத்தை செய்துவந்தாலும் சமீப காலங்களில், வர்த்தகர் களுக்காக புரோக்கரேஜ் நிறுவ னங்கள் பிரத்யேக செயலி களை உருவாக்கி உள்ளன. இத னால் மொபைல் வர்த்தகம் அதிக ரித்துள்ளன. ஸ்மார்ட்போன்களின் விற்பனை உயர்வது, வர்த்தகம் அதிகரிப்பதற்கான காரணம் என்று சந்தை வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், கோடக் செக்யூரிட்டீஸ், மோதி லால் ஆஸ்வால் பைனான்ஸியஸ் சர்வீசஸ், ஐஐஎப்எல், ஏஞ்சல் புரோக்கிங் ஆகிய நிறுவனங் களின் பிரத்யேக செயலிகள் ஆண்ட்ராய்ட் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோர் களில் உள்ளன.
மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.8,000 கோடி அளவுக்கு மொபைல் மூலம் வர்த்தகம் நடைபெறுகிறது.