வணிகம்

இந்திய டிஜிட்டல் பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலராக உயரும்: தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி

பிடிஐ

இந்திய டிஜிட்டல் பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலர் என்கிற இலக்கை எட்ட ஐடி துறை உதவும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அமைச்சர் இதனை குறிப்பிட்டார். மேலும் அவர் பேசியதாவது:

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த வாய்ப்புகள், இ-காமர்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் தயா ரிப்புகள், மின்னணு பரிவர்த்தனை, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல நூறு கோடி டாலருக்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால் 1 லட்சம் கோடி டாலர் என்பது பெரிய இலக்கு அல்ல.

இந்தியா அடுத்த 7 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் நாம் ஏன் 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்த இலக்கை 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் நம்மால் எட்ட முடியும் என்றார்

இந்திய ஐடி துறை வருவாய் ரூ.10 லட்சம் கோடியை தொட்டுள்ளது. அதுபோல ஐடி ஏற்றுமதி ரூ.7.5 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி என்பது நமது தேவைக்கு ஏற்ப நாமே உருவாக்கி மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் மக்களுக்கு எளிமையாக கிடைக்க வேண்டும். குறிப்பாக விலை குறைவாகவும் பாதுகாப்பு நிறைந்த தொழில்நுட்பங்களையும் நாம் உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் பேசினார்.

SCROLL FOR NEXT