பொதுகாப்பீட்டு துறையில் முக்கிய நிறுவனமான ஹெச்டிஎப்சி எர்கோ, எல் அண்ட் டி ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இந்த இணைப்பின் மதிப்பு ரூ.551 கோடி ஆகும்.
இந்த துறை இணைப்புகளை ஹெச்டிஎப்சி எர்கோ தொடங்கி யுள்ளதாக ஹெச்டிஎப்சி தலைவர் தீபக் பரேக் தெரிவித்தார். மேலும் பொதுகாப்பீட்டு துறையை வளர்ப் பதற்கு நிறுவனங்கள் இணைவது தவிர்க்க முடியாதது.
இரு நிறுவனங்கள் இணைந்திருப்பதன் மூலம் செலவுகள் குறையும், திறன் மேம்பாடு, பாலிசிதாரர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் குறிப் பிட்டார். ஹெச்டிஎப்சி எர்கோ 108 அலுவலகங்களில் செயல்பட்டு வருகிறது. ரூ.3,467 கோடி பிரீமியம் வசூல் செய்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.151 கோடி லாபமீட்டியது. கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டியின் துணை நிறுவனம் எல் அண்ட் டி ஜெனரல் இன்ஷூரன்ஸ் ஆகும். இந்த நிறுவனம் 483 கோடி ரூபாய் பிரீமியம் வசூல் செய்திருக்கிறது.