வணிகம்

சேவைத் துறையில் அன்னிய நேரடி முதலீடு 60% வீழ்ச்சி

செய்திப்பிரிவு

சேவைத் துறையில் அன்னிய நேரடி முதலீடு (எப்டிஐ) நடப்பு நிதிஆண்டின் முதல் 9 மாதங்களில் 60 சதவீதம் சரிந்துள்ளது. வங்கித்துறை, காப்பீடு, வெளிப்பணி ஒப்படைப்பு (பிபிஓ), ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கூரியர், தொழில்நுட்ப பரிசோதனை ஆகிய வற்றை உள்ளடக்கிய சேவைத் துறையில் அன்னிய நேரடி முதலீடு 169 கோடி டாலராக உள்ளது.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் அன்னிய நேரடி முதலீடு 404 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மத்தியில் புதிய அரசு அமைந்தபிறகு முதலீடுகளை மேற்கொள் ளலாம் என அன்னிய முதலீட் டாளர்கள் கருதுவதே முதலீடு குறைந்ததற்குக் காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேவைத் துறையில் அன்னிய நேரடி முதலீடு குறைந்ததால் ஒட்டு மொத்தமாக இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு 3 சதவீதம் குறைந்ததாக தனியார் வரி ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன் மல்ஹோத்ரா தெரிவித்தார். இதுவரை இந்தி யாவில் செய்யப்பட்ட நேரடி அன்னிய முதலீடு 2,200 கோடி டாலராகும்.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் செய்யப்பட்ட முதலீடு 2,278 கோடி டாலராகும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. கட்டுமான மேம்பாடு, உலோகத்துறை, ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் துறைகளிலும் அன்னிய நேரடி முதலீடு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT