முதல் காலாண்டின் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) நடப்பு கணக்கு பற்றாக்குறை ஜிடிபியில் 0.1 சதவீதமாக ( 30 கோடி டாலர்) இருக்கிறது. வல்லுநர்களின் கணிப்பு படி நடப்பு கணக்கில் 400 கோடி டாலர் உபரி இருக்கும் என்னும் எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் இதே காலத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஜிடிபி யில் 1.2 சதவீதமாக (610 கோடி டாலர்) இருந்தது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில் இவை தெரியவந்திருக்கிறது.