மின் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் உள்ள தென்னிந்திய நிறுவனமான வி-கார்டு நிறுவனம் நவீன வசதிகளுடன் கூடிய `வெரானோ’ என்கிற புதிய வகையிலான வாட்டர் ஹீட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய வாட்டர் ஹீட்டரை நிறு வனத்தின் இயக்குநரும், தலைமைச் செயல்பாட்டு அதிகாரியுமான ராமச்சந்திரன் அறிமுகப்படுத்தி பேசியதாவது:
நிறுவனம் தென்னிந்தியாவில் ஸ்டெபிலைசர், இன்வெர்ட்டர், யுபிஎஸ் சிஸ்டம்ஸ் தயாரிப்புகளில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவின் முயற்சி யில் உருவான இந்த புதிய வகையி லான வாட்டர் ஹீட்டர் வாடிக்கை யாளர்களை ஈர்க்கும் என்றார்.
வெரானோ வாட்டர் ஹீட்டரை வை-பை இணைப்பின் மூலம் ஸ்மார்ட்போனிலிருந்தே இயக்க லாம். மேலும் இதற்கான செயலி மூலம் நமது வசதிக்கு ஏற்பவும் இயக்க முடியும். இதில் உள்ள சென் சார்கள், நீரில் வெப்ப நிலையை ஸ்மார்ட்போனுக்கு அனுப்பும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 5 நட்சத்திர தரச் சான்றுடன மின்சாரத்தை சிக்கனப் படுத்தும் கருவியாக இது உள்ளது என்றும் குறிப்பிட்டார்.