சொகுசு கார்கள் தயாரிப்பில் முன் னணியில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் ஜிஎல்சி ரக எஸ்யுவி மாடல் காரை சென் னையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் எஸ்யுவி ரகத்தில் 6 மாடல்களைக் கொண்ட தனிப் பெரும் நிறுவனமாக பென்ஸ் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
முந்தைய எஸ்யுவி மாடல் களின் வழித் தோன்றலாக இல் லாமல் புத்தம் புதியதாக இது அறிமுகமாகியுள்ளது. முழுவதும் வெளிநாட்டிலேயே தயாரிக்கப் பட்டு அப்படியே இறக்குமதி செய்யும் மாடலாக (சிபியு) இது இந்தியச் சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத் தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் போரிஸ் பிட்ஸ் குறிப் பிட்டார்.
தென்னிந்தியாவில் கார் சந்தை கடந்த ஆண்டில் 40 சதவீத வளர்ச் சியை எட்டியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 35 சதவீத வளர்ச்சி காணப்பட்டதாக பிட்ஸ் குறிப் பிட்டார். டீசல் மற்றும் பெட்ரோல் மாடல்களில் வந்துள்ள இந்த கார் முந்தைய மாடல்களைக் காட் டிலும் பல்வேறு சிறப்பம்சங்க ளைக் கொண்டுள்ளது.
இலகு ரக அதே சமயம் உறுதியான கட்டமைப்பைக் கொண்டது. இதன் எடை வழக்க மான எஸ்யுவி-யை விட 80 கிலோ குறைவு. ஆனால் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்பட வில்லை. ஐந்து விதமான ஓட்டும் வசதியைக் கொண்டது. வழக்க மான சாலைப் பயணம், சாகசப் பயணம், வழுக்கு தளங்களிலும் மிகச் சிறப்பான பயணத்தை அளிக்கக் கூடியது. ஜிஎல்சி 220 மாடல் எடிஷன் 1 விலை ரூ. 56.70 லட்சமாகும். ஜிஎல்சி 300 எடிஷன் 1 விலை ரூ. 56.90 லட்சமாகும்.