வணிகம்

1,000 கோடி ரூபாய் திரட்டுகிறது ஜேகே சிமெண்ட்

செய்திப்பிரிவு

விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ரூ.1,000 கோடி நிதியைத் திரட்ட ஜேகே சிமெண்ட் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. திரட்டும் நிதி மூலம் நிறுவனத்தின் கடன் சுமையை குறைக்கவும், நிர்வாக ரீதியிலான பணிக்கு பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது.

நிறுவன இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டதாக பிஎஸ்இ-க்கு அளித்த அறிக்கையில் நிறுவனம் தெரிவித் துள்ளது. ஜூலை 29-ம் தேதி நடை பெற உள்ள பங்குதாரர்கள் கூட்டத் தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகே இந்நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என நிறுவனம் தெரிவித் துள்ளது. நிறுவனங்கள், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள், தகுதி படைத்த முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங் கள் உள்ளிட்டவற்றின் மூலம் இந்த நிதியைத் திரட்ட ஜேகே சிமெண்ட் திட்டமிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இந்நிறுவன பங்கு மும்பை பங்குச் சந்தையில் 1.49 சதவீதம் சரிந்து ரூ. 968.60-க்கு வர்த்தகமானது.

SCROLL FOR NEXT