வணிகம்

2015-16-ம் நிதி ஆண்டில் ஓலாவின் தினசரி நஷ்டம் ரூ.6 கோடி

பிடிஐ

கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ஓலா நிறுவனத்தின் தினசரி நஷ்டம் ரூ.6 கோடி என தெரிய வந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் ஆண்டில் மொத்தம் ரூ.2,311 கோடி அளவுக்கு நஷ்டத்தை ஓலா சந்தித்திருக்கிறது. அதிக விளம்பரங்கள், சலுகைகள் மற்றும் பணியாளர்கள் கட்டணங்களால் இந்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ.796 கோடி அளவுக்கு மட்டுமே நஷ்டமடைந்தது. அமெரிக் காவைச் சேர்ந்த உபெர் நிறுவனத் துடனான போட்டியை சமாளிக்க கூடுதலாக ஓலா செலவளித்திருக்கிறது. நிறுவன விவகார அமைச் சகத்துக்கு ஓலா தாக்கல் செய்திருக் கும் அறிக்கை மூலம் இவை தெரியவந்திருக்கிறது.

அதேபோல வருமானமும் உயர்ந்திருக்கிறது. 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ.103 கோடியாக இருந்த வருமானம் 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.758 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து கருத்து கேட்பதற்காக அனுப்பிய மின்னஞ்சலுக்கு ஓலா நிறுவனம் பதில் அளிக்கவில்லை.

டோப்லர் நிறுவனத்தின் ஏஞ்சல் அகர்வால் இதுகுறித்து கூறியதாவது: ஓலாவின் நஷ்டம் அதிகரித்தாலும், நஷ்ட வரம்பு கணிசமாக குறைந்திருக்கிறது. 2014-15-ம் நிதி ஆண்டில் ஒரு ரூபாயை சம்பாதிக்க 8.50 ரூபாயை ஓலா செலவு செய்திருக்கிறது. அடுத்த 2015-16-ம் நிதி ஆண்டில் ஒரு ரூபாயை சம்பாதிக்க 4 ரூபாய் மட்டுமே செலவு செய்திருக்கிறது. கடந்த 2016-17-ம் நிதி ஆண்டில் செலவளிக்கும் தொகை 2-3 ரூபாய் செலவிலே ஒரு ரூபாய் வருமானத்தை ஈட்டியிருக்கும் என தெரிவித்தார்.

கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் பணியாளர்களுக்காக 85.16 கோடி ரூபாய் மட்டுமே ஓலா செலவு செய் திருக்கிறது. ஆனால் 2015-16 நிதி ஆண்டில் பணியாளர்களுக்காக ரூ.461.60 கோடி செலவு செய்திருக் கிறது. அதேபோல விளம்பரத்துக் காக செலவு செய்திருக்கும் தொகையும் ரூ.99.84 கோடியில் இருந்து ரூ.437.89 கோடியாக செலவு அதிகரித்திருக்கிறது.

ஓலா நிறுவனம் பட்டியலிடப்படாத நிறுவனம் என்பதால் காலாண்டு முடிவுகளை அறிவிக்கத் தேவையில்லை. இந்த நிறுவனம் இதுவரை 150 கோடி டாலர் நிதியை திரட்டி இருக்கிறது. சாப்ட்பேங்க், டைகர் குளோபல், மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ், செக்கோயா இந்தியா, ஆக்செல் பார்ட்னர்ஸ் மற்றும் பல்கன் எட்ஜ் ஆகிய முதலீட்டு நிறுவனங்கள் ஓலாவில் முதலீடு செய்திருக்கின்றன.

ஓலா தற்போது 119 இந்திய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. ஆனால் உபெர் நிறுவனம் 29 நக ரங்களில் மட்டுமே இயங்கி வரு கிறது. ஓலாவில் கார், ஆட்டோ ரிக்‌ஷா உள்ளிட்ட 6 லட்சம் வாக னங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT