ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2007ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.
வங்கி மற்றும் நிதிச் சேவை துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
ஐசிஐசிஐ வங்கியில் முதன்மை பொது மேலாளராக பணியாற்றியுள்ளார். ஐசிஐசிஐ வங்கியின் சர்வதேச வங்கி கிளைகளை தொடக்கத்தில் வழிநடத்தியதில் பங்கு வகித்தவர்.
மத்திய கிழக்கு, ஆப்ரிக்க நாடுகளில் ஐசிஐசிஐ வங்கியை கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியில் திட்ட நிதி, சர்வதேச வங்கிச் சேவை, கார்ப்பரேட் வங்கி உள்ளிட்ட பிரிவுகளில் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியவர்.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்பியின் இயக்குநர் குழுவிலும் உள்ளார்.
இந்திய பட்டயக் கணக்காளர், காஸ்ட் அக்கவுண்டன்சி பயிற்சிகளை முடித்தவர்