பெப்சிகோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக டி. சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு நோக்கியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
நிறுவனத்தின் பொது மேலாளராக உள்ள கௌதம், இந்நிறுவனத்தின் ஆசியா, மத்தியகிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவகுமார், பெப்சிகோ நிறுவனத்தின் தயாரிப்புகளான குளிர்பானங்கள், சிப்ஸ்கள், குயேக்கர் ஓட்ஸ் உள்ளிட்டவை விற்பனையைக் கவனிக்க வேண்டும்.
டாடா குளோபல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பெப்சிகோ நிறுவனம் நேபாளம், பூடான், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளில் செயல்படும் நொரிஷ்கோ நிறுவனத்தின் செயல்பாடுகளை இவர் கவனிக்க வேண்டும்.