வணிகம்

ரிஸ்க் - என்றால் என்ன?

இராம.சீனுவாசன்

ஒவ்வொரு முதலீட்டிலும் நாம் ஒரு குறிப்பிட்ட வருமானத்தை எதிர்பார்க்கிறோம். ஆனால் அந்த முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் காரணமாக, நாம் நினைத்த வருமானம் கிடைக்காது.

ஒரு வங்கியில் ஒரு வருட வைப்புத்தொகை ரூ 1,000 போடுகிறோம். இதில் 10% வட்டி கொடுப்பதாக வங்கி உறுதியளிக்கிறது. ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் ரூ 1,100 பெறுகிறீர்கள். இந்த ஒரு வருடத்தில் பணவீக்கம் 5% இருந்தால் உங்கள் உண்மை வருவாய் 5% தான். (உண்மை வருவாயை கணக்கிடும் முறை : பண வருவாய் விகிதம் – பணவீக்க விகிதம், 10% - 5% = 5%.) பணவீக்கம் 9% இருந்தால் உண்மை வருவாய் 1% தான்.

இவ்வாறு பணவீக்கம் மாறும்போது உண்மை வருவாய் மாறும். இந்த பணவீக்கம்தான் ரிஸ்க். இந்த ரிஸ்க் எல்லா நிதி முதலீடுகளிலும் இருக்கும்.

ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்குவாதாக வைத்துகொள்வோம். அந்நிறுவனம் செய்யும் தொழிலில் உள்ள பிரச்சனைகளால் நிறுவனத்தின் லாபம், சொத்தின் மதிப்பு ஆகியவை மாறும், இதனால் பங்கின் விலை, டிவிடெண்ட் ஆகியவை மாறும். இதனை வியாபார ரிஸ்க் (business risk) என்பர். ஒரு நாட்டின் பணக் கொள்கைக்கு ஏற்ப நாட்டில் வட்டி விகிதமும் மாறும், இது வட்டி ரிஸ்க் (interest risk).

நாட்டின் பொருளாதாரம் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படும். பொதுவாக சந்தை பொருளாதாரங்களில் பிஸினஸ் சுழற்சி (business cycle) காரணமாக வருமானத்திலும் மாற்றம் இருக்கும்.

பொருளாதார மாற்றங்களுக்கு அரசியல் சமூகக் காரணங்களும் உள்ளன. எல்லாவித பொருளாதார மாற்றங்களினால் ஏற்படும் வியாபார மாற்றம், அதனால் ஏற்படும் வருவாய் மாற்றத்தை சந்தை ரிஸ்க் (market risk) என்பர்.

SCROLL FOR NEXT