வணிகம்

சிறுதொழில் நிறுவனங்கள் அறியாத அறிவுசார் சொத்துரிமை

செய்திப்பிரிவு

சிறு தொழில் நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமையால் ஏற்படும் பயன்களைப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்று ஐரோப்பிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் அறிவுசார் சொத்துரிமை பிரிவின் தலைவர் அரவிந்த் சோப்ரா கூறினார்.

ஐரோப்பிய காப்புரிமை முறை குறித்து இந்திய தொழிலகக் கூட்டமைப்பு மற்றும் ஆந்திரப் பிரதேச தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு மையம் திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: அறிவுசார் சொத்துரிமை குறித்து சிறுதொழில் நிறுவனங்களுக்கு போதிய அனுபவம் இன்மையே தடைக்கல்லுக்கு முக்கியக் காரணமாகும். இந்திய காப்புரிமை தொடர்பான முழுமையான தகவல் கிடைக்காததால் காப்புரிமை கோரி உள்ளூர் கண்டுபிடிப்பாளர்கள் பதிவு செய்வது குறைந்துள்ளது. இது காப்புரிமை தொடர்பான உத்திகளை வகுப்பதில் சிரமமான விஷயமாகிறது. மேலும் காப்புரிமை தொடர்பான விவரங்கள் கிடைக்காததால் புதிய கண்டுபிடிப்புகள் உருவாவது இங்கு தாமதமாகிறது.

காப்புரிமை கோரி விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து ஐரோப்பிய காப்புரிமை அலுவலக இயக்குநர் டைடர் ட்ஸோபி கூறியது: காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அவரது கண்டுபிடிப்பு தொடர்பான விவரத்தை 18 மாதங்களுக்குப் பிறகு விரிவாக விளக்க வேண்டும். காப்புரிமை பதிவானது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

SCROLL FOR NEXT