வணிகம்

பால், முட்டை, இறைச்சி உற்பத்தி அதிகரிப்பு: மக்களவையில் அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு இந்தியாவில் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்தார்.

மக்களவையில் எழுத்துமூல மாக அளித்த பதிலில் அவர் மேலும் கூறியது: பால் உற்பத்தி 15.50 கோடி டன்னாக உயர்ந்துள் ளது. உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.

பால் உற்பத்தி 4.30 சதவீதமும், முட்டை உற்பத்தி 6.42 சதவீதமும், இறைச்சி உற்பத்தி 8.74 சதவீதமும் கடந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரையான காலாண்டில் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

மொத்தம் 550 கோடி முட்டை மற்றும் 46 லட்சம் டன் இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பால் வளத்தைப் பெருக்கவும், முட்டை உற்பத் தியைப் பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT