வணிகம்

பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது

செய்திப்பிரிவு

இன்று காலை வர்த்தக துவக்கத்தின் போது, பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 82 புள்ளிகள் குறைந்து 21,291.46 புள்ளிகளாகவும், நிப்டி 27.15 புள்ளிகள் குறைந்து 6,318.50 புள்ளிகளாகவும் இருந்தன.

வங்கி, உலோக துறை பங்கு வர்த்தகம் சரிவுடன் காணப்படுகின்றன. ஆசிய பங்குச்சந்தைகளான ஹாங்காங் பங்குச்சந்தையிலும், ஜப்பான் பங்குச்சந்தையிலும் வர்த்தகம் சரிவுடனேயே வர்த்தகமாகியிருந்தன.

வர்த்தக துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் குறைந்து 62.13 ஆக இருந்தது. நேற்று, ரூபாய் மதிப்பு கடந்த 2 வாரங்களில் இல்லாத அளவுக்கு 12 காசுகள் குறைந்து 61.93 என்ற நிலையில் இருந்தது.

SCROLL FOR NEXT