மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத்துறை பங்குகளின் இ.டி.எஃப் (CPSE—ETF) கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கெயில், ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, இந்தியன் ஆயில், ஆயில் இந்தியா, பி.எஃப்.சி., ஆர்.இ.சி. கண்டெய்னர் கார்ப்பரேஷன் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் என்ஜினீயர்ஸ் இந்தியா ஆகிய 10 பொதுத்துறை நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஓபன் எண்டட் ஃபண்ட் வகையை சேர்ந்தது.
மார்ச் 18 முதல் மார்ச் 21 வரை இந்த புதிய பண்டின் சந்தா ஏற்றுக்கொள்ளப்படும். சர்வதேச அளவில் இந்த வகையான முதலீட்டு திட்டம் பிரபலமாக இருந்தாலும், இந்தியாவில் இப்போதுதான் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறது.
இந்த ஃபண்டில் சிறு முதலீட்டாளர்களுக்கு 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். மேலும் 15 யூனிட்களுக்கு ஒரு யூனிட் வழங்கப்படும். இதில் சிறுமுதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 5,000 ரூபாயி லிருந்து முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை இந்த இ.டி.எஃப்.-ல் முதலீடு செய்யலாம்.