இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தின் மதிப்பு ஆண்டுக்கு 40 முதல் 45 சதவீதம் வரை உயரும் என்று ஆர்.என்.சி.ஓ.எஸ் நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. வரும் 2018-ம் ஆண்டு வரை இந்த வளர்ச்சி இருக்கும் என்று இந்த நிறுவனம் கருத்து தெரிவித்திருக்கிறது.
ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்பது, மொபைல் மூலன் இணையத்தை பயன்படுத்துவது அதிகரிப்பது, சுலப தவணை முறையில் வாங்குவது, நேரம் குறைவது ஆகிய காரணங்களால் இந்த வளர்ச்சி சாத்தியம் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
2018-ம் ஆண்டு இந்திய ஆன்லைன் வணிகத்தின் சந்தை மதிப்பு 1,450 கோடி டாலராக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2018-ம் ஆண்டில் 12.5 கோடி இந்தியர்கள் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவார்கள் என்று கணித்திருக்கிறது. ஜூலை 2014 வரை அதிக பார்வையாளர்களை பிளிப்கார்ட்- மிந்த்ரா கவர்ந்திருக்கிறது.