வணிகம்

27000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்

பிடிஐ

நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 27000 புள்ளிகளை கடந்து முடிவடைந்தது. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 236 புள்ளிகள் உயர்ந்து 27002 புள்ளியில் முடிவடைந்தது. நிப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 8270 புள்ளியில் முடிவடைந்தது. மிட்கேப் குறியீடு சிறிதளவு உயர்ந்தும், ஸ்மால்கேப் குறியீடு சிறிய அளவில் சரிந்தும் முடிவடைந்தது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுமா என்பதற்கான வாக்கெடுப்பு தொடங்கிவுடன் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஏற்றம் இருந்தது. இதன் காரணமாக இந்திய சந்தைகளிலும் ஏற்றம் இருந்தது.

ஜெர்மனியின் குறியீடு டாக்ஸ் 2.2 சதவீதமும், பிரான்ஸின் சிஏசி 40.2 சதவீதமும், பிரிட்டனின் எப்டிஎஸ்இ குறியீடு 1.55 சதவீதமும் உயர்ந்து வர்த்தகம் நடந்தன.

துறைவாரியாக பார்க்கும் போது பேங்க் நிப்டி அதிகம் உயர்ந்தது. ஆட்டோ, எப்எம்சிஜி, பார்மா உள்ளிட்ட துறைகளிலும் வாங்கும் போக்கு அதிகமாக இருந்தது. நிப்டி பட்டியலில் உள்ள பங்குகளில் 37 பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன, 14 பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன.

டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி, அம்புஜா சிமென்ட், எஸ்பிஐ, டாக்டர் ரெட்டீஸ் லேப், பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் உயர்ந்து முடிந்தன. மாறாக பார்தி இன்பிராடெல், என்டிபிசி, சிப்லா, ஐஷர் மோட்டார்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

SCROLL FOR NEXT