எல் அண்ட் டி நிறுவனத்தின் தற்போதைய செயல் தலைவரான ஏ.எம் நாயக்கின் செயல்பாடுகளை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க இயக்குநர் குழு நேற்று முடிவு செய்துள்ளது. மேலும் தலைமைச் செயல் அதிகாரியாக எஸ்.என்.சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
பொறியியல் துறையில் நாயக் மிகப் பெரும் திறன் வாய்ந்தவர். அவரது பதவி காலம் வரும் செப் டம்பர் 30ம் தேதியுடன் முடிவடை கிறது. அதன் பிறகு தினசரி பொறுப்பு கள் இல்லாத செயல் தலைவராக அக்டோபர் 1-ம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுவார் என்று எல் அண்ட் டி நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் தலைமைச் செயல் அதி காரி மற்றும் நிர்வாக இயக்குநராக எஸ்.என்.சுப்ரமணியனை நியமிக் கவும் இயக்குநர் குழு முடிவு செய் துள்ளது. தற்போது துணை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக உள்ள இவர் ஜூலை 1-ம் தேதி முதல் புதிய பொறுப்பில் செயல்படுவார்.