ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் துணை வங்கிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இணைகின்றன. இந்திய வங்கிகள் வரலாற்றில் மிகப்பெரிய இணைப்பு இதுவாகும். ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்பூர் (எஸ்பிபிஜே), ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் (எஸ்பிஎம்), ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் (எஸ்பிடி), ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா ஆகிய ஐந்து துணை வங்கிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் மூன்று துணை வங்கிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 1 முதல் இந்த பங்குகள் வர்த்தகத்தில் எஸ்பிஐ பங்குகளாக மாறும், மேலும் துணை வங்கி பங்குகள் வர்த்தகத்தில் இருந்து நீக்கப்படும்.
10 எஸ்பிபிஜே பங்கு வைத்தி ருப்பவர்களுக்கு 28 எஸ்பிஐ பங்குகள் கிடைக்கும். அதேபோல 10 எஸ்பிஎம் மற்றும் எஸ்பிடி பங்கு வைத்திருப்பவர்களுக்கு 22 எஸ்பிஐ பங்குகள் கிடைக் கும்.
-பிடிஐ
தற்போது இருக்கும் ஐந்து துணை வங்கியின் இயக்குநர் குழு மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகள் கலைக்கப்படும். மே மாதம் இறுதியில் இந்த இணைப்பு முழுமையாகும். அதற்கடுத்த ஒரிரு மாதங்களில் அனைத்து வங்கி கிளைகளும் எஸ்பிஐயாக மாற்றப்படும்.