வணிகம்

இவரைத் தெரியுமா?- சவுரப் அகர்வால்

செய்திப்பிரிவு

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி யாக சமீபத்தில் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத் திலிருந்து 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆதித்யா பிர்லா மேனேஜ்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உத்திகள் வகுக்கும் பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந் தவர்.

ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு இந்தியாவின் நிதி பிரிவுக்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர். இதே வங்கியின் கார்ப்பரேட் பைனான்ஸ் பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

ஆதித்யா பிர்லா குழுமத்தில் பணியாற்றும் போது ஐடியா-வோடபோன் இணைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்.

டிஎஸ்பி மெரிலிஞ்ச் நிறுவனத்தின் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் பிரிவுக்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

ரூர்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இன்ஜினீயரிங் பட்டமும் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

SCROLL FOR NEXT