பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டம் தொடர்பான விவரங்களை வெளியிட முடியாது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார நலன் கருதி இந்த விவரங்களை வெளியிட முடி யாது என தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மனுவுக்கு பிரத மர் அலுவலகம் விளக்கமளித் துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் கடந்த ஜுன் 5-ம் தேதி ஜிஎஸ்டி தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் துறை செயலாளர்கள் மற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு போடப்பட்டது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 8 (1)-ன் கீழ் நாட்டின் பொருளாதார நலன் கருதி இந்த கூட்டம் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)-ல் நாட்டின் இறையாண்மையை, பாதுகாப்பை, பொருளாதார நலனை, அந்நிய நாட்டு உறவுகளைப் பாதிக்கும் வகையிலான தகவல்களை வெளியிட வேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் நாட்டில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஜூன் 5-ம் தேதி ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற பிறகு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு வருவது நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும். எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் மாற்றத்தைக் கொண்டு வருமாறும் துறைச் செயலாளர்களை பிரதமர் கேட்டுக்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டிருந்தது.
மேலும் சர்வதேச நாடுகள் இந்தியா மீதான பார்வையை தற்போது மாற்றியுள்ளது. இந்த வாய்ப்பை நாம் நழுவவிடக்கூடாது. சர்வதேச நாடுகளின் தேவைக்கேற்ப நாம் செயல்முறைகளை உருவாக்கவேண்டும் என்று செயலாளர்களிடம் கேட்டுக் கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜுன் 5-ம் தேதி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி ஜிஎஸ்டியின் தற்போதையை நிலை குறித்து ஆராய்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.