வணிகம்

இயல்பான கொடைத்தன்மை தேவை: அஸிம் பிரேம்ஜி

செய்திப்பிரிவு

கம்பெனி சட்டத்தின்கீழ் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ( ரூ. 5 கோடி நிகர லாபம் இருக்கிற அல்லது 1000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகிற அல்லது 500 கோடிக்கு மேல் சொத்து இருக்கிற நிறுவனங்கள்) தங்களது லாபத்தில் 2 சதவிகிதத்தை சமூகத்தின் வளர்ச்சிக்கு செலவிட வேண்டும் என்ற சட்டம் சமீபத்தில் சட்டமாக்கப்பட்டது.

டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 40-வது அனைத்திந்திய மேனேஜ்மெண்ட் சங்கத்தின் விழாவில் கலந்துகொண்ட விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜி கம்பெனி சட்டத்தை பற்றி கருத்து தெரிவித்தார். அதாவது, சமூக ஆர்வம் என்பது இயல்பான செயலாக இருக்க வேண்டுமே தவிர, அதைக் கட்டாயப்படுத்த கூடாது என்று சொல்லி இருக்கிறார். அதே சமயத்தில் இந்த சமூக அக்கறைக்கு அரசு மட்டுமே பொறுப்பல்ல, நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும். சமூகத்தில் இருந்து கற்றுக்கொண்டதை மீண்டும் சமூகத்துக்கு திருப்பி கொடுப்பதால் வளர்ச்சி இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி என்பதும் தனிநபர் கொடை என்பதும் வேறு வேறு என்றும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். தன்னுடைய பங்காக 12,300 கோடி ரூபாயை கொடையாக கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில், அஸிம் பிரேம்ஜிக்கு கார்ப்பரேட் சிட்டிசன் விருது வழங்கி கௌரவித்தது அனைத்திந்திய நிர்வாகவியல் சங்கம்.

SCROLL FOR NEXT