வணிகம்

விசா பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்க அதிகாரிகளுடன் நாஸ்காம் பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

அமெரிக்கா அரசு விசா வழங்கும் நடைமுறையில் பல்வேறு மாற்றங் களை செய்து வருகிறது. இதனால் ஐடி துறையில் பணிநீக்கம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் விசா பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்திய ஐடி துறை அமைப்பான நாஸ்காம் முயன்று வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்காவில் சட்டம் இயற்றுபவர்களுடன், செல்வாக்குமிக்க நிறுவனங்கள் மூலமாக நாஸ்காம் (இந்திய ஐடி நிறுவனங்களின் சங்கம்) பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது.

நிர்வாகிகளோடு சந்திப்பு

கடந்த ஆண்டிலிருந்து நாஸ்காம் அமைப்பினுடைய இடைத்தரகு செலவு அதிகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. விசா பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 2017-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 1 கோடி ரூபாய் நாஸ்காம் அமைப்பு கொடுத்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் 70 லட்ச ரூபாய் (1.1 லட்சம் டாலர்) கொடுக்கப் பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் இதே தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு நிறுவனங்களில் ‘தி லேண்டே’ குழுமத்துக்கு 2017 முதல் காலாண்டில் 50,000 டாலர் வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு நிறுவனமான வெக்ஸ்லர் அண்ட் வாக்கர் நிறுவனத்துக்கு 1 லட்சம் டாலர் கொடுத்துள்ளது.

இதில் ‘தி லாண்டே’ குழுமம் வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க வர்த்தக அதிகாரி களோடு அமெரிக்க குடியுரிமை மற்றும் இடப்பெயர்வு தொடர் பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த வருட தொடக்கத்தில் நாஸ்காம் அமைப்பின் அதிகாரிகள் அமெரிக்கா சென்று ட்ரம்பின் நிர்வாக அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத் தக்கது. முக்கியமாக வேலைக்கான விசா மற்றும் திறன்வாய்ந்த ஊழியர் களை பயன்படுத்திக் கொள்வது பற்றி விவாதித்து வந்தனர். அப்போது நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகர் ஹெச்1பிவிசா பிரச்சினை குறித்து அமெரிக்க அரசு அதிகாரிகள், சட்டமியற்றுபவர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

SCROLL FOR NEXT